Thursday 9 August 2012

பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்’ன்னு ஒரு சின்ன SMSஅனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், “இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி?


உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர்பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.
நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலைகுனிவாள். பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள்.ஆனால், உங்கள் அருகாமையை வரும்புவாள்  மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள்.
அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தார்னா சொல்றீங்க.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்த மிடுவாள்.
அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டி ருக்கும் காதலை வெளிப்படுத்தும்.
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை, சூடிய மலர், மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்கமாட்டாள்.
அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழி கள்.
எப்படி வெல்கிறது…?
உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவிடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும் போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும்.
அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?


அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.
ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் “கடுகடு சிடுசிடு”வேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.
ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் “குறும்பும் நகைச்சுவையும் செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.
இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன். நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.
அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?

பெண்களின் மனதை கொள்ளையடிப்பது எப்படி?


பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:
நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.
எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும்? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.
இன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.